2021ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது காலிறுதி சுற்றை எட்டியுள்ளது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசை பட்டியலில் 114ஆவது இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் அஸ்லான் கரட்சேவ் 18ஆவது நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் டிமிட்ரோவ் கைப்பற்றிய நிலையில், இரண்டாவது செட்டிலிருந்து யாரும் எதிர்பாரத அபார ஆட்டத்தை அஸ்லான் கரட்சேவ் வெளிப்படுத்தினார். இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றிய கரட்சேவ், மூன்றாவது மற்றும் நான்காவது செட்களையும் எளிமையாக 6-1, 6-2 எனக் கைப்பற்றினார்.
இதன் மூலம் காலிறுதிப் போட்டியை 2-6, 6-4, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று டிமிட்ரோவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் கரட்சேவ். இந்த அபார வெற்றியின் மூலம், தனது முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் வீரர் (professional era-வில்) என்ற சாதனையை படைத்துள்ளார் அஸ்லான் கரட்சேவ்.
வரும் வியாழன் அன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான நோவாக் ஜோகோவிக்கை கரட்சேவ் எதிர்கொள்கிறார்.
இதையும் படிங்க: 'என்னை ஹீரோவாக உணர வைத்த ரசிகர்களுக்கு நன்றி' - ரவிச்சந்திரன் அஸ்வின்!