ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் நிக் கிர்ஜியோஸ், தனது 25ஆவது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இந்நிலையில், இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக க்ரீக் நாட்டின் சிட்சிபாஸ் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்தப் புகைப்படத்தில் அவர் வெளி இடத்தில், தனது கையில் பதாகையுடன் காட்சியளித்தார். மேலும் அந்த பதாகையில் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், இந்த எண்ணிற்கு அழைப்பு விடுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் வைரலான இந்தப் புகைப்படத்தைக் கண்ட ரசிகர்கள், அது அவரது தொலைபேசி எண்ணாகத்தான் இருக்கும் என நினைத்து அழைத்துள்ளனர். ஆனால், அது நிக் கிர்ஜியோஸின் தொலைபேசி எண் என்பது பிறகு தான் தெரியவந்தது.
சிட்சிபாஸின் இந்த பதிவைக் கண்ட கிர்ஜியோஸ், 'நீ ஒரு முட்டாள். தயவு செய்து எனக்கு கால் செய்வதை அனைவரும் நிறுத்திக்கொள்ளுங்கள் ' என கமெண்ட் அடித்தார்.
இதையும் படிங்க: செப். 27-இல் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர்...!