அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் நடைபெற்ற சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆடவர் இறுதி ஆட்டம் இன்று நடைப்பெற்றது. இதில் ரஷ்யாவைச் சேர்ந்த டேனில் மெட்வதேவ், பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் மெட்வதேவ் 7-6 என்ற புள்ளிக் கணக்கில் கோஃபினை வீழ்த்தி முதல் செட்டை கைப்பற்றினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மெட்வதேவ் 6-4 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றி டேவிட் கோஃப்பினை வீழ்த்தினார்.
இதன்மூலம் 7-6, 6-4 என்ற செட்கணகில் பெல்ஜியத்தின் கோஃபினை வீழ்த்தி டேனில் மெட்வதேவ் கோப்பையைத் தட்டிச்சென்றார். மெட்வதேவ் ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 தொடரில் முதல்முறையாக கோப்பையைக் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.