இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் உக்ரைனிய வீராங்கனை ஸ்விட்டோலினாவை எதிர்த்து செக் குடியரசின் மார்கெட்டாவுடன் மோதினார். தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிபடுத்திய செக் குடியரசு வீராங்கனை மார்கெட்டா, 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.
பின்னர் சுதாரித்துக் கொண்ட உக்ரைன் வீராங்கனை ஸ்விட்டோலினா 6-4 என இரண்டாவது செட்டை கைப்பற்றினார். தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை ஆக்ரோஷமாக ஆடிய ஸ்விட்டோலினா 6-4 என்ற கணக்கில் கைப்பற்றியதால், அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.