சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்து நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (39). நீண்ட காலமாக டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தை தக்கவைத்திருந்தவர் ஃபெடரர், இதுவரை 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இருப்பினும், சமீப காலமாக அவரால் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல முடியவில்லை.
அவர் கடைசியாக பெற்ற கிராண்ட்ஸ்லாம் விருது 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில்தான். இந்த வருடம் நடந்து முடிந்த மூன்று கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் அவரால் சோபிக்க முடியவில்லை.
கடந்த வாரம் நிறைவடைந்த, விம்பிள்டன் டென்னிஸின் காலிறுதி சுற்றில் போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காஸிடம் நேர்செட்டில் ஃபெடரர் தோல்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விம்பிள்டன் தொடரின்போது அவருக்கு மூட்டு வலி ஏற்பட்டுள்ளது. இதனால், ஜூலை 23ஆம் தேதி தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். காயத்தில் இருந்து மீள்வதற்கான நடைமுறையை தொடங்கிவிட்டதாகவும், இந்த ஆண்டின் இறுதியில் மீண்டும் டென்னிஸ் விளையாடுவதற்கு திரும்புவேன் என ஃபெடரர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐசிசி தரவரிசை வெளியீடு- 2ஆம் இடத்தில் விராத் கோலி!