ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் நான்காவது சுற்று ஆட்டங்கள் இன்று நடந்தன. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் சுவிஸ் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரரை எதிர்த்து ஹங்கேரிய டென்னிஸ் வீரர் பியூசோவிக்ஸ் ஆடினார்.
இந்தப் போட்டியின் முதல் செட்டை யாரும் எதிர்பாராதவிதமாக பியூசோவிக்ஸ் கைப்பற்ற, ஆட்டம் பரபரப்பை எட்டியது. இதையடுத்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தில் 6-1 என ஃபெடரர் கைப்பற்ற, அதையடுத்து ஃபெடரர் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
-
1️⃣
— #AusOpen (@AustralianOpen) January 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
2️⃣
3️⃣
The secret to @rogerfederer's match recovery.#AO2020 | #AusOpen pic.twitter.com/ET4GRRI7bs
">1️⃣
— #AusOpen (@AustralianOpen) January 26, 2020
2️⃣
3️⃣
The secret to @rogerfederer's match recovery.#AO2020 | #AusOpen pic.twitter.com/ET4GRRI7bs1️⃣
— #AusOpen (@AustralianOpen) January 26, 2020
2️⃣
3️⃣
The secret to @rogerfederer's match recovery.#AO2020 | #AusOpen pic.twitter.com/ET4GRRI7bs
பின்னர் நடந்த மூன்றாவது மற்றும் நான்காவது செட் ஆட்டத்தில் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ரோஜர் ஃபெடரர் வெற்றிபெற்று ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடந்த மற்றொரு போட்டியில் இத்தாலி வீரர் ஃபோக்னினியை எதிர்த்து அமெரிக்க வீரர் சாண்ட்கிரன் ஆடினார். இந்தப் போட்டி ரசிகர்களுக்கு மிகச்சிறந்த விருந்தாக அமைந்தது. இந்தப் போட்டியில் 7-6 (7-5), 7-5, 6-7 (2-7), 6-4 என்ற செட்களில் அமெரிக்க வீரர் சாண்ட்கிரன் வெற்றிபெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார்.
இவர் காலிறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரரை எதிர்த்து ஆடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய பயஸ் ஜோடி!