கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், நிகோலோஸ் பசிலாஷ்விலியை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் பெடரர் கைப்பற்றினார். அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகோலோஸ் இரண்டாவது செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி ஆட்டத்தில் பரபரப்பை உண்டாக்கினார்.
இதையடுத்து, 5-7 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை பெடரர் இழந்தார். இதன் மூலம் நிகோலோஸ் 3-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் ஃபெடரரை வீழ்த்தி, கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இத்தோல்வியின் மூலம் ரோஜர் ஃபெடரர், கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றோடு வெளியேறினார். மேலும், ஓராண்டு இடைவேளைக்குப் பிறகு ரோஜர் ஃபெடரர் பங்கேற்ற முதல் சர்வதேச டென்னிஸ் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டிகள்: கத்தாரில் நடத்த திட்டம்!