ETV Bharat / sports

#USOpen2019: பிளிஸ்கோவா, ஹாலெப் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்!

யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் நட்சத்திர வீராங்கனைகளான கிரிஸ்டியான பிளிஸ்கோவா மற்றும் சிமோனா ஹாலெப் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

author img

By

Published : Aug 28, 2019, 11:26 AM IST

halep and pliskova

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யுஎஸ் ஓபன் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் செக் குடியரசின் நட்சத்திர வீராங்கனை கிரிஸ்டியான பிளிஸ்கோவா, பிரெஞ்சின் டயன் பாரியை எதிர்கொண்டார்.

கிரிஸ்டியான பிளிஸ்கோவா
கிரிஸ்டியான பிளிஸ்கோவா

ஆரம்பம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிளிஸ்கோவா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் டயன் பாரியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இன்று நடைபெற்ற மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் ரோமானியாவின் சிமோனா ஹாலெப் அமெரிக்காவின் நிக்கோல் கிப்ஸை எதிர்கொண்டார்.

சிமோனா ஹாலெப்
சிமோனா ஹாலெப்

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஹாலெப் 6-3 என்ற புள்ளி கணக்கில் கிப்ஸிடமிருந்து பறித்தார். அதன் பின் இரண்டாவது செட்டை கிப்ஸ் 6-3 என்ற கணக்கில் ஹாலெப்பை விழ்த்தி ஆட்டத்தில் சம நிலையை ஏற்படுத்தினர்.

இறுதி செட்டை ஹாலெப் 6-2 என்ற கணக்கில் கைப்பற்ற 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்குகளில் நிக்கோல் கிப்ஸை வீழ்த்தி யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

Intro:Body:

Simona Halep, Pliskova In Second Round Of US open

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.