சீனாவின் ஹுபெய் நகரில் மகளிருக்கான வுகான் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெலாரஸின் ஆர்யனா சபாலெங்கா, அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கேவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு வீராங்கனைகளும் சமபலத்துடன் மோதினார். இப்போட்டியின் முதல் செட்டை ஆர்யனா 6-3 எனக் கைப்பற்ற, இரண்டாவது செட்டை அலிசன் 6-3 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
இதனால் ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற விறுவிறுப்பு தொற்றிக்கொண்டது. இறுதியில் மூன்றாவது செட்டை ஆர்யனா சபாலெங்கா 6-1 என கைப்பற்றி அலிசனை அதிரடியாக வீழ்த்தினார்.
இதன் மூலம் பெலாரஸின் ஆர்யனா சபாலெங்கா 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கேவை வீழ்த்தி இரண்டாவது முறையாக வுகான் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
-
Sealed with an Ace! 🏆 @SabalenkaA goes back-to-back in Wuhan! 🙌 pic.twitter.com/MgKWn7BwMx #WuhanOpen
— Wuhan Open (@wuhanopentennis) September 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sealed with an Ace! 🏆 @SabalenkaA goes back-to-back in Wuhan! 🙌 pic.twitter.com/MgKWn7BwMx #WuhanOpen
— Wuhan Open (@wuhanopentennis) September 28, 2019Sealed with an Ace! 🏆 @SabalenkaA goes back-to-back in Wuhan! 🙌 pic.twitter.com/MgKWn7BwMx #WuhanOpen
— Wuhan Open (@wuhanopentennis) September 28, 2019
இதன் மூலம் வுகான் ஓபன் டென்னிஸ் தொடரில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்று செக் குடியரசின் பெட்ரா கிவிடோவாவின் சாதனையை ஆர்யனா சபாலெங்கா சமன் செய்துள்ளார்.
இதையும் படிங்க:
பல் மருத்துவத்திலிருந்து பவர் லிஃப்டிங் வரை - தங்கம் வென்ற வீர மங்கை ஆரத்தி அருணின் பேட்டி!