சீன ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவின் நட்சத்திர வீரர் ஜான் இஸ்னர் இங்கிலாந்தின் டான் எவன்ஸை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இஸ்னர் 7-6, 7-5 என்ற நேர் செட்கணக்குகளில் டான் எவன்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் அமரிக்காவிக் ஜான் இஸ்னர் சீன ஓபன் காலிறுதிச்சுற்றுக்கு தேர்ச்சிப் பெற்றுள்ளார்.
நாளை நடைபெறவுள்ள சீன ஓபன் காலிறுதிப் போட்டியில் ஜான் இஸ்னர் கிரீஸ் நாட்டின் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸை எதிர்கொள்ளவுள்ளார்.
இதையும் படிங்க: 'நாங்களும் ஃபார்முலதான் இருக்கோம்' - அசத்திய ராகுல், அதிரடியில் பாண்டே!