கரோனா வைரஸ் காரணமாக டென்னிஸ் தொடர்கள் ஜூலை 31ஆம் தேதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஏட்ரியா கண்காட்சி டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதனை ஜோகோவிச்சின் தொண்டு நிறுவனம் ஸ்பான்சர் செய்துள்ளது.
இந்தக் காண்காட்சி டென்னிஸ் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ஜோகோவிச்சை எதிர்த்து இளம் வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் மோதினார். சுவாரஸ்மாக சென்ற ஆட்டத்தின் இறுதியில் வெற்றிபெற்ற ஜோகோவிச், அதையடுத்து சில நிமிடங்களில் கண்ணீர் சிந்தினார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ''இன்று மைதானத்தில் மிகவும் எமோஷனலாக இருந்தேன். சிறுவயது ஞாபகங்கள் அதிகமாக நினைவுக்கு வந்தன. எனது இளமை காலம் முழுவதையும் இதே கோர்ட்டில் தான் பயிற்சி செய்துள்ளேன். அதனால் தான் எனது கண்களில் கண்ணீர் வந்தது. நான் அழவில்லை.
எனது சிறுவயது முதல் மக்களை இன்றிணைக்கும் மையமாக இந்தக் கோர்ட் இருந்துள்ளது. இப்போதும் எனது சிறுவயது பயிற்சியாளர்கள் முதற்கொண்டு என் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் எனக்காக வந்துள்ளார்கள்'' என்றார். ஜோகோவிச் கண்ணீர் சிந்திய வீடியோ ரசிகர்களிடையே டெண்டிங்காகி வருகிறது.