2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் இன்றைய நாள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. இன்று நடந்த போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெளியேறியதால், நவோமி ஒசாகா - கோகோ காஃப் வீராங்கனைகளுக்கு இடையிலான போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த வீராங்கனைகள் இதற்கு முன்னதாக ஆடிய போட்டியில் நவோமி ஒசாகா வென்றிருந்தார். எனவே இன்று ஒசாகாவுக்கு பதிலடி கொடுக்கப்படுமா என்ற கேள்வியும் இருந்தது.
இந்தநிலையில் இன்று நடந்த முதல் செட் ஆட்டத்தில் தொடக்கம் முதலே கோகோ ஆக்ரோஷமாக ஆட, நவோமி முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் பறிகொடுத்தார். இதனால் நவோமியின் ஆட்டத்தில் சிறிது மந்தம் ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட கோகோ காஃப், இரண்டாவது செட் முதல் புள்ளியை வேகமாக கைப்பற்றினார். பின்னர் ஒசாகா மீண்டும் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் புள்ளியைப் பெற, கோகோ 2-1 என முன்னிலைப்பெற்றார்.
-
That winning moment 🤗#AO2020 | #AusOpen | @CocoGauff pic.twitter.com/tQYKTKAZDN
— #AusOpen (@AustralianOpen) January 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">That winning moment 🤗#AO2020 | #AusOpen | @CocoGauff pic.twitter.com/tQYKTKAZDN
— #AusOpen (@AustralianOpen) January 24, 2020That winning moment 🤗#AO2020 | #AusOpen | @CocoGauff pic.twitter.com/tQYKTKAZDN
— #AusOpen (@AustralianOpen) January 24, 2020
இதனையடுத்து 3-3 என்ற நிலை ஏற்பட, ஒவ்வொரு ரேலியும் ரசிகர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின் அடுத்த இரண்டு புள்ளிகளை கோகோ கைப்பற்ற, ஆட்டத்தில் கோகோவின் கை ஓங்கியது. இறுதியாக கோகோ 6-4 என்ற கணக்கில் இரண்டாவது செட்டைக் கைப்பற்றி அசத்தினார்.
இந்தத் தோல்வியால் நடப்பு சாம்பியனான நவோமி ஒசாகா ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறினார். ஒரேநாளில் இரு பெரிய வீராங்கனைகள் தொடரிலிருந்து வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
"I need a selfie for Instagram!"
— #AusOpen (@AustralianOpen) January 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
We think @rodlaver can probably oblige, @CocoGauff! 🤳#AO2020 | #AusOpen pic.twitter.com/cfirkrL1WN
">"I need a selfie for Instagram!"
— #AusOpen (@AustralianOpen) January 24, 2020
We think @rodlaver can probably oblige, @CocoGauff! 🤳#AO2020 | #AusOpen pic.twitter.com/cfirkrL1WN"I need a selfie for Instagram!"
— #AusOpen (@AustralianOpen) January 24, 2020
We think @rodlaver can probably oblige, @CocoGauff! 🤳#AO2020 | #AusOpen pic.twitter.com/cfirkrL1WN
மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஜுனியர் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் வெளியேறிய கோகோ, இந்த ஆண்டு நடப்பு சாம்பியனை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் என்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: வெளியேறிய செரீனா... பழிதீர்த்துக்கொண்ட வாங்!