ETV Bharat / sports

பாரிஸ் மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறிய நடால்! - latest tennis news

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் நடால், காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

nadal-reaches-paris-masters-quarters-chasing-elusive-title

author img

By

Published : Nov 6, 2020, 3:31 PM IST

பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரின் நான்காவது சுற்றில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் - ஜோர்டன் தாம்சன் ஆகியோர் ஆடினார். இதில் நடால் முதல் செட்டை 6-1 என்று எளிதாக கைப்பற்றினார். ஆனால் இரண்டாவது செட் ஆட்டத்தில் ஜோர்டன் தனது மொமண்டத்தைப் பெற்றார்.

இதனால் நடாலுக்கு கடும் சவாலளித்தார். அவர் நடாலை எதிர்த்து சில வின்னர்கள் அடிக்க, ஆட்டம் 6-5 என்று சென்றது. இறுதியாக டை ப்ரேக்கர் மூலம் நடால் 7-6 (3) என்ற கணக்கில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த ஆட்டம் குறித்து நடால் கூறுகையில், ''ஜோர்டன் சிறப்பாக ஆடினார். நிச்சயம் அவரைப் பாராட்ட வேண்டும். சர்வ்-களின்போது மிகச்சிறப்பாகத் திசையை மாற்றினார். சரியான இடங்களில் ஷாட்களை அடித்தார்'' என்றார்.

ஆனால் ஜோர்டன் தாம்சன் ஆட்டத்தின்போது தனது ராக்கெட்டை விரக்தியில் கீழே எறிந்தார். காலிறுதிச் சுற்றில் நடால் சக நாட்டு வீரரான பாப்லோ கரேனோவை எதிர்கொள்கிறார்.

இதுவரை இவர்கள் ஆடிய 6 போட்டிகளில் நடால் அனைத்தையும் வென்றுள்ளதால், எளிதாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: ஒருவிதத்தில் ஒரு வருட தடையும் நல்லது தான்: ஷகிப் அல் ஹசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.