ETV Bharat / sports

ஏடிபி ஃபைனல்ஸ்: இரண்டாவது சுற்றில் நடால்..! - நடால் - ரூப்ளேவ்

லண்டன்: ஏடிபி ஃபைனல்ஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் ரூப்ளேவ்வை வீழ்த்தி ரஃபேல் நடால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

nadal-eases-to-opening-win-at-atp-finals

author img

By

Published : Nov 16, 2020, 4:30 PM IST

உலகின் 8 முன்னணி டென்னிஸ் வீரர்கள் பங்கேற்கும் டென்னிஸ் தொடரான ஏடிபி ஃபைனல்ஸ் லண்டனில் நேற்று தொடங்கியது. இந்த 8 வீரர்கள் டோக்கியோ 1970 மற்றும் லண்டன் 2020 என்று பெயர் வைத்து இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

டோக்கியோ 1970 பிரிவில் ஜோகோவிச், மெத்வதேவ், ஸ்வெரேவ், டீகோ ஸ்வார்ட்ஸ்மேன் ஆகியோரும், லண்டன் 2020 பிரிவில் நடால், டொமினிக் தீம், சிட்சிபஸ், ரூப்ளேவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இதில் இன்று நடந்த குரூப் போட்டியில் நடால் - ரூப்ளேவ் ஆகியோர் ஆடினர். நட்சத்திர அணிகள் ஆடும் போட்டி என்பதால், தொடக்கம் முதலே பரபரப்பாக இருந்தது. இதில் நடால் 6-3, 6-4 என எளிதாக வெற்றிபெற்றார். இந்தப் போட்டி ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் நடந்தது.

இந்த வெற்றி குறித்து நடால் கூறுகையில், '' எப்போதும் எப்படி தொடங்குகிறோம் என்பது முக்கியம். ஏனென்றால் நன்றாக தொடங்கவில்லை என்றால் நம்மிடன் போதுமான உறுதி இருக்காது. இப்போது நன்றாக உணர்கிறேன். அடுத்தப் போட்டியில் டாமினிக் தீமை எதிர்கொள்வதற்கு தயாராகவே இருக்கிறேன். நிச்சயம் அவருடன் ஆடுவது சவாலான காரியம் தான். ஆனால் இந்தப் போட்டியில் கிடைத்த வெற்றி, எனக்கு நல்ல உந்துசக்தியாக இருக்கும்'' என்றார்.

இதையும் படிங்க: ஏடிபி பைனல்ஸ் போட்டி; ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ்-ஐ பழிதீர்த்த டொமினிக் தீம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.