மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி ஃபிரான்சின் மொனாக்கொ நகரில் நடைபெற்றது. இதில் 13ஆம் நிலை வீரரான இத்தாலியின் ஃபேபியோவை எதிர்த்து 48ஆம் நிலை வீரரான செர்பியாவின் லஜோவிச் மோதினார்.
இதில் முதல் செட் ஆட்டம் தொடங்கியது முதலே அதிரடியாக ஆடிய ஃபேபியோவின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாத லஜோவிச் திணறினார். முதல் செட் ஆட்டம் முடிவில் ஃபேபியோ 6-3 எனக் கைப்பற்றினார்.
இதன் இரண்டாவது செட் ஆட்டத்திலும் ஃபேபியோவின் அதிரடி தொடர, அதை 6-4 எனக் கைப்பற்றி முதன்முறையாக மாஸ்டர்ஸ் கோப்பைத் தொடரைக் அவர் கைப்பற்றி சாதனைப் படைத்தார்.
இந்த தொடர் தொடக்கம் முதலே நட்சத்திர வீரர்களான ரூப்லவ், சுவாரவ், போர்ன கோரிக், ரஃபேல் நடால் ஆகியோரை வீழ்த்தி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 51 ஆண்டுகளுக்கு பின்னர் இத்தாலி வீரர் ஒருவர் மான்டி மார்லோ கோப்பையை வென்ற பெருமையை ஃபேபியோ பெற்றுள்ளார்.