2019ஆம் ஆண்டுக்கான மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் ப்ளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் செக் குடியரசின் நட்சத்திர வீராங்கனை பிளிஸ்கோவாவை எதிர்த்து மார்க்கேடா மோதினார்.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிளிஸ்கோவா முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்ற, இரண்டாவது செட்டை 6-4 என்ற நேர் செட்களில் அதிரடியாக வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 80 நிமிடங்கள் வரை நீடித்தது.
நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ரோமேனிய நட்சத்திர வீராங்கனை சிமோனா ஹெலப்பை எதிர்த்து பிளிஸ்கோவா மோதவுள்ளார்.