2019ஆம் ஆண்டுக்கான மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் ப்ளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் நட்சத்திர வீரர் ஃபெடரரை எதிர்த்து ரஷ்ய வீரர் மெத்வெதேவ் மோதினார்.
முன்னதாக, இவ்விருவருக்கிடையில் நேற்று நடைபெறுவதாக இருந்த போட்டி மழைக் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, இன்று நடைபெற்றது.
இதனையடுத்து தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய ஃபெடரர் முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்ற, தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டையும் 6-2 என நேர் செட்களில் கைப்பற்றி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
காலிறுதியில் நட்சத்திர வீரர் ஃபெடரருடன் தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் ஆண்டர்சன் மோதவுள்ளதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.