மியாமி ஓபன் மாஸ்ட்ரஸ் டென்னிஸ் தொடர் ஃபுளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்றில் முதல்நிலை வீரரும், செர்பியாவின் நட்சத்திர வீரருமான நோவாக் ஜோகோவிச், ஸ்பெயினின் பவ்டிஸ்டா அகட் உடன் மோதினார்.
முதல் செட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஜோகோவிச் 6-1 என்ற கணக்கில் லாவகரமாக வென்றார். பின் இரண்டாம் செட்டில் ஏழுச்சி பெற்ற பவ்டிஸ்டா அகட் ஜோகோவிச்சிற்கு கடும் நெருக்கடியை தந்தார். இதன் விளைவாக ஜோகோவிச் 5-7 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினார்.
இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில், பவ்டிஸ்கா அகட்டின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய ஜோகோவிச் 3-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதன் மூலம் 6-1, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் தோல்வி அடைந்ததன் மூலம், தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் பவ்டிஸ்டா அகட், நாளை நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னருடன் மோதவுள்ளார்.