2019ஆம் ஆண்டுக்கான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்றுவருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் ரோமானிய வீராங்கனை சிமோனா ஹெலப்பை எதிர்த்து ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி மோதினார்.
தொடர் காயங்களால் அவதியடைந்து வந்த சிமோனா, இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட் ஆட்டத்தைக் கைப்பற்ற இரு வீராங்கனைகளும் போராட்ட குணத்தை வெளிப்படுத்திய நிலையில், இறுதியாக முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் சிமோனா கைப்பற்றினார்.
இதனையடுத்து இரண்டாவது செட் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக சிறிது இடைவேளை எடுத்துக்கொண்ட சிமோனா, பின்னர் களம் கண்டார். இதனையடுத்து அபாரமாக ஆடிய சிமோனா இரண்டாவது செட்டையும் மிகப்பெரிய போராட்டத்திற்கு பின்னர் 7-5 எனக் கைப்பற்றி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
அரையிறுதிப் போட்டியில் ரோமானிய வீராங்கனை சிமோனா ஹெலப் சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக்கை எதிர்த்து ஆடவுள்ளார்.