உலக மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பால் நடத்தப்படும் டபுள்யூ.டி.ஏ. ஃபைனல்ஸ் டென்னிஸ் தொடர் தற்போது சீனாவின் சென்ஷென் நகரில் நடைபெற்றுவருகிறது. உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதல் பத்து இடங்களில் உள்ள வீராங்கனைகளுக்காக நடத்தப்படும் இந்தத் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இதனிடையே உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த் ஆஷ்லி பார்ட்டி, இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஜப்பானின் நவோமி ஒசாகா (மூன்றாவது ரேங்க்) ஆகியோர் இன்று நடைபெறவிருந்த போட்டியில் மோதுவதாக இருந்தது. ஆனால் நவோமி ஒசாகா காயம் காரணமாகப் பாதியிலேயே வெளியேறியதால் அவருக்குப் பதிலாக இப்போட்டியில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸ் (10ஆவது ரேங்க்) களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஷ்லி பார்ட்டி - கிகி பெர்டன்ஸ் மோதினர். இதில் முதல் செட்டை ஆஷ்லி 6-3 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றினார். இருப்பினும் அடுத்த இரண்டு செட்களிலும் ஆக்ரோஷமாக ஆடிய கிகி பெர்டன்ஸ் 6-3, 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி ஆஷ்லி பார்ட்டிக்கு அதிர்ச்சியளித்தார். இப்போட்டி இரண்டு மணிநேரம் ஒன்பது நிமிடங்கள் நீடித்தது.
-
👏👏 @kikibertens comes back from a set down to defeat Barty, 3-6, 6-3, 6-4, at the Shiseido @WTAFinals Shenzhen pic.twitter.com/pQhvfBsrmo
— WTA (@WTA) October 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">👏👏 @kikibertens comes back from a set down to defeat Barty, 3-6, 6-3, 6-4, at the Shiseido @WTAFinals Shenzhen pic.twitter.com/pQhvfBsrmo
— WTA (@WTA) October 29, 2019👏👏 @kikibertens comes back from a set down to defeat Barty, 3-6, 6-3, 6-4, at the Shiseido @WTAFinals Shenzhen pic.twitter.com/pQhvfBsrmo
— WTA (@WTA) October 29, 2019
முன்னதாக இம்மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற சீன ஓபன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆஷ்லி பார்ட்டியிடம் கிகி தோல்வியுற்றிருந்தார். அதற்குப் பதிலடி தரும்படியாக அவர் இன்றையப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்.