ஜப்பான் மகளிர் ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் நட்சத்திர வீரங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் அமெரிக்காவின் நிக்கோல் கிப்ஸை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தில் இறங்கிய கெர்பர் முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கிப்ஸிடமிருந்து கைப்பற்றினார். தொடர்ந்து தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெர்பர் இரண்டாவது செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் தனதாக்கினார்.
இதன் மூலம் ஏஞ்சலிக் கெர்பர் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் நிக்கோல் கிப்ஸை வீழ்த்தி முதல் முறையாக ஜப்பான் மகளிர் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.