மியாமி ஓபன் மாஸ்ட்ரஸ் டென்னிஸ் தொடர் ஃபுளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் அமெரிக்கவீரர் ஜான் இஸ்னர், ஸ்பெயினின் பவ்டிஸ்டா அகட் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
முதல் செட்டில் இவ்விரு வீரர்களும் வெற்றி பெறுவதற்காக கடுமையாக போராடினர். இறுதியில் ஜான் இஸ்னர் 7-6 என்ற கணக்கில் டை பிரேக்கர் முறையில் முதல் செட்டை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாம் செட்டிலும் இவ்விரு வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு விளையாடியதால் இரண்டு செட் போட்டியும் டை பிரக்கர் வரை சென்றது.
இதில், நேர்த்தியான ஆட்டத்தை வெளிபடுத்திய ஜான் இஸ்னர் 7-6 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை போராடி வென்றார். இதன் மூலம் ஜான் இஸ்னர் 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் பவ்டிஸ்டா அகட்டை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.