இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்றது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஜெர்மன் வீராங்கனை கெர்பரை எதிர்த்து கனடாவின் ஆண்ட்டிரீஸ்கு மோதினார். தரவரிசைப் பட்டியலில் 8 ஆம் இடத்தில் இருக்கும் கெர்பரை எதிர்த்து 18 வயதேயாகும் ஆண்ட்டிரீஸ்கு மோதியதால் இப்போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதன் முதல் செட்டின் தொடக்கத்திலேயே, யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியாக ஆடி ஆண்ட்டிரீஸ்கு கெர்பருக்கு அதிர்ச்சி கொடுத்தார். முதல் செட்டை 6-4 என ஆண்ட்டிரீஸ்கு கைப்பற்ற, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு பன்மடங்கு மேலோங்கியது.
இரண்டாவது செட்டை துணிந்து ஆடிய ஆண்ட்டிரீஸ்கு-வுக்கு, ஜெர்மன் வீராங்கனை கெர்பர்தான் யார் என்பதை நிரூபித்தார். இரண்டாவது செட்டை 6-3 எனக் கெர்பர் கைப்பற்றினார்.
பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டம் தொடக்கத்திலிருந்தே ரசிகர்களுக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஆண்ட்டிரீஸ்கு ஆட்டம் கெர்வருக்கு அச்சுறுத்தலாகவே அமைந்தது. தொடர்ந்து அதே ஆட்டத்தை வித்தியாசமாக வெளிப்படுத்திய ஆண்ட்டிரீஸ்கு மிகப்பெரிய போராட்டத்துடன் 6-4 என மூன்றாவது செட்டை கைப்பற்றி கெர்வரை வீழ்த்த டென்னிஸ் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
The joy. The celebration. An unforgettable week. 👏 @Bandreescu_ #BNPPO19
— BNP Paribas Open (@BNPPARIBASOPEN) March 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
pic.twitter.com/3t3FQLuB8C
">The joy. The celebration. An unforgettable week. 👏 @Bandreescu_ #BNPPO19
— BNP Paribas Open (@BNPPARIBASOPEN) March 17, 2019
pic.twitter.com/3t3FQLuB8CThe joy. The celebration. An unforgettable week. 👏 @Bandreescu_ #BNPPO19
— BNP Paribas Open (@BNPPARIBASOPEN) March 17, 2019
pic.twitter.com/3t3FQLuB8C
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரை ஒயில்ட் கார்டு சுற்று மூலம் நுழைந்து பட்டத்தை வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை ஆண்ட்டிரீஸ்கு படைத்தார்.