21 வயதே ஆகும் கிரேக்க வீரர் ஸ்டிஃபானோஸ் சிட்சிபாஸ் (Stefanos Tsitsipas). கடந்த 15 ஆண்டுகளாக டென்னிஸின் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றி வரும் ஃபெடரர், நடால், ஜோகோவிச் ஆகிய மூவரையும் வீழ்த்திய ஒரே இளம் வீரர் சிட்சிபாஸ் என்பதால், இவரின் ஆட்டம் மீது ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்படும். டென்னிஸின் ஆடவர் ஏடிபி தரவரிசையில் 6ஆம் இடத்தில் இருக்கும் சிட்சிபாஸ், விரைவில் முதலிடத்திற்கு வருவேன் என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், “ஃபெடரர், நடால், ஜோகோவிச் ஆகிய மூவரும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களை எதிர்த்து ஆடுவது பெரும் சவாலாக உள்ளது. ஒவ்வொரு முறை அவர்களை எதிர்த்து ஆடுகையிலும், நான் இன்னும் அதிக தூரங்கள் பயணிக்க வேண்டும் என்பதை அறியமுடிகிறது. அப்போது நிறையக் கற்றுக்கொள்கிறேன்.
அவர்களின் ஆட்ட நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப என்னை தயார்படுத்தி வருகிறேன். ஃபெடரர், நடால், ஜோகோவிச் ஆகியோரை விட சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து தொடர்களிலும் தொடர்ந்து சிறப்பாக ஆடவேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு பயிற்சிமேற்கொண்டுள்ளேன். கடந்த ஆண்டு டென்னிஸில் எனக்கு சிறந்த ஆண்டாக அமைந்தது’’ என்றார்.
இதையும் படிங்க: நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் தரவிருக்கும் சானியா மிர்சா!