மகளிருக்கான துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்றுவருகிறது. 2012ஆம் ஆண்டில் டென்னிஸிலிருந்து ஓய்வுபெற்ற பெல்ஜியம் வீராங்கனை கிம் கிலிஸ்டர்ஸ் இந்தத் தொடரில் பங்கேற்றார். இதன்மூலம், 36 வயதான இவர் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டென்னிஸில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
முன்னாள் முதல் நிலை வீராங்கனையான இவர், இத்தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், ஸ்பெயினைச் சேர்ந்த கார்பைன் முகுருசாவை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கிம் கிலிஸ்டர்ஸ் 2-6, 6-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். முன்னதாக, 2007இல் டென்னிஸிலிருந்து ஓய்வுபெற்ற இவர், திருமணம் செய்துகொண்டு மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த பின் 2009இல் மீண்டும் கம்பேக் தந்தார்.
அந்தத் தருணத்தில்தான் அவர் மகளிர் ஒற்றையர் பிரிவில் 2009, 2010இல் அடுத்தடுத்து அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரையும், 2011இல் ஆஸ்திரேலிய ஓபன் தொடரையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தோல்வியுடன் சொந்த மண்ணில் விடைப்பெற்றார் லியாண்டர் பயஸ்!