'ஸ்ட்ரோக்ஸ் ஆஃப் ஜீனியஸ்' என்ற பெயரில் டிஸ்கவரி ப்ளஸ் சார்பாக டாக்குமெண்டரி ஒன்றை உருவாக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஆகியோர் நடால் - ஃபெடரர் ஆகியோர் பற்றி பேசியுள்ளனர்.
அதில் சானியா மிர்சா பேசுகையில், ''சர்வதேச ப்ரீமியர் டென்னிஸ் லீக் தொடர்களில் பங்கேற்றபோது இருவரின் அணிகளிலும் ஆடியுள்ளேன். அவர்கள் இருவரும் மற்றவர் பற்றி ஆன் கேமரா, ஆஃப் கேமராவில் பேசுவது ஆச்சரியமாக இருந்தது. நான் முதல் நடால் அணியிலும், அடுத்த ஆண்டு ஃபெடரர் அணியிலும் இடம்பெற்றேன். ஒருவர் மற்றொருவர் மீது வைத்திருக்கும் மரியாதை அளப்பரியது.
டென்னிஸ் கோர்ட்டில் அவர்கள் இருவரும் ஆடிய ஆட்டங்கள் பற்றி வரலாறுகள் இருக்கிறது. அதுவே அவர்களை ஜாம்பவான்களாக மாற்றியுள்ளது. டென்னிஸிற்காக அவர்கள் பல விஷயங்களை செய்துள்ளனர்'' என்றார்.
இதனைத்தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து பேசுகையில், '' நிச்சயம் ஃபெடரரும், நடாலும் ஜாம்பவான் வீரர்கள். இருவரின் ஆட்டமும் மிகவும் பிடிக்கும். அவர்களில் ஒருவரை தேர்வு செய்வது மிகவும் கடினமானது. டென்னிஸில் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து விளையாட்டுகளிலேயே நடால் - ஃபெடரர் ரைவல்ரிதான் சிறந்தது. என்னை மிகவும் ஊக்கப்படுத்தியதில் பெரும் பங்கு அவர்கள் இருவருக்கும் உள்ளது.
2004ஆம் ஆண்டு நடந்த மியாமி டென்னிஸ் தொடரில் நம்பர் 1 இடத்தில் இருந்த ஃபெடரரை, நடால் வீழ்த்தினார். அதேபோன்ற ஒரு வெற்றியைதான் 2012ஆம் ஆண்டில் நானும் ஒலிம்பிக் சாம்பியனான லியை வீழ்த்தினேன்'' என்றார்.
இதையும் படிங்க: நடால் நீ இதற்கு தகுதியானவன்' - ரஃபேல் நடாலை பாராட்டிய ரோஜர் ஃபெடரர்!