2020ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஆறுமுறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மனை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில், முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் மில்மனிடம் பறிகொடுத்த ஃபெடரர், இரண்டாவது செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி ஆட்டத்தை தனதாக்கினார். இதனையடுத்து இருவரும் தலா இரு செட்களை கைப்பற்றி ஆட்டத்தில் சமநிலையை ஏற்படுத்தினர்.
இதனால் ஆட்டம் சூப்பர் டைபிரேக்கர் வரை சென்றது. சூப்பர் டைபிரேக்கர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஃபெடரர், இறுதியாக 7-6 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஐந்தாவது செட்டை கைப்பற்றி, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் தனது 100ஆவது வெற்றியைப் பதிவு செய்து புதிய உலகசாதனைப்படைத்துள்ளார்.
மேலும் இப்போட்டியில் மில்மனை வெற்றி பெறுவதற்கு ஃபெடரர் எடுத்துகொண்ட நேரம் 4 மணி 3நிமிடங்களாகும். இதன் மூலம் சுவிஸ் நாட்டின் ரோஜர் ஃபெடரர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பதினைந்து வயது வீராங்கனையிடம் தோல்வியடைந்த நவோமி ஒசாகா!