ETV Bharat / sports

யூ.எஸ்.ஓபன்: மூன்றாம் சுற்றில் அசத்திய டோமினிக் தீம்! - யூ.எஸ்.ஓபன் 2020

யூ.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீரர் டோமினிக் தீம் 6-2, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் மரின் சிலிச்சை வீழ்த்தி நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Dominic Thiem advances to fourth round of US Open with win over Marin Cilic

author img

By

Published : Sep 6, 2020, 2:38 PM IST

டென்னிஸ் விளையாட்டின் பிரபலமான தொடரான யூ.எஸ்.ஓபன் தொடர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று ஆட்டத்தில், உலகின் இரண்டாம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டோமினிக் தீம், குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியா டோமினிக் தீம் முதல் இரண்டு செட்களையும், 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி சிலிச்சிற்கு அதிர்ச்சியளித்தார். அதன் பின்னர் நடைபெற்ற மூன்றாவது செட்டிற்கான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மரின் சிலிச் அந்த செட்டையும் 3-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நான்காவது செட் ஆட்டத்தில் மீண்டும் அதிரடியாக விளையாடிய டோமினிக் தீம் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.

டோமினிக் தீம் - மரின் சிலிக்

இதன் மூலம் யூ.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் டோமினிக் தீம் 6-2, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்குகளில் மரின் சிலிச்சை வீழ்த்தி, நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதையும் படிங்க:அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் இயன் பெல் ஓய்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.