ரோம்: இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
பிரபல டென்னிஸ் தொடரான இத்தாலியன் ஓபன் தொடர், அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற (செப்.21) ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றிய ஜோகோவிச், இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி ஸ்வார்ட்ஸ்மேனுக்கு அதிர்ச்சியளித்தார்.
-
He was feeling it all week 🔥🔥🔥
— ATP Tour (@atptour) September 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Relive the best of @DjokerNole's 🏆 run in Rome ⬇️@InteBNLdItalia | #IBI20 pic.twitter.com/hFErPSvfag
">He was feeling it all week 🔥🔥🔥
— ATP Tour (@atptour) September 21, 2020
Relive the best of @DjokerNole's 🏆 run in Rome ⬇️@InteBNLdItalia | #IBI20 pic.twitter.com/hFErPSvfagHe was feeling it all week 🔥🔥🔥
— ATP Tour (@atptour) September 21, 2020
Relive the best of @DjokerNole's 🏆 run in Rome ⬇️@InteBNLdItalia | #IBI20 pic.twitter.com/hFErPSvfag
இதன் மூலம் இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனை வீழ்த்தி, ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: சஹால் சுழலில் பெங்களூரு அசத்தல் வெற்றி!