இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இரண்டாம் நிலையில் உள்ள இந்த வைரஸ் மூன்றாம் நிலையை எட்டிவிடக் கூடாது என்பதற்காக, அடுத்த மாதம் 14வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு திடீரென அறிவிக்கப்பட்டதால் தினக்கூலிகள், சிறு, குறு தொழிலாளர்கள், நடுத்தர வர்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உதவும் வகையில், பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த தொகையைப் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிவருகின்றனர். அந்தவகையில், இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி திரட்டியுள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
The last week we have tried as a team to provide some help to the people in need..we provided food to thousands of families and raised 1.25 Crore in one week which will help close to 1 Lakh people.its an ongoing effort and we are in this together 🙏🏽@youthfeedindia @safaindia pic.twitter.com/WEtl1ebjVR
— Sania Mirza (@MirzaSania) March 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The last week we have tried as a team to provide some help to the people in need..we provided food to thousands of families and raised 1.25 Crore in one week which will help close to 1 Lakh people.its an ongoing effort and we are in this together 🙏🏽@youthfeedindia @safaindia pic.twitter.com/WEtl1ebjVR
— Sania Mirza (@MirzaSania) March 30, 2020The last week we have tried as a team to provide some help to the people in need..we provided food to thousands of families and raised 1.25 Crore in one week which will help close to 1 Lakh people.its an ongoing effort and we are in this together 🙏🏽@youthfeedindia @safaindia pic.twitter.com/WEtl1ebjVR
— Sania Mirza (@MirzaSania) March 30, 2020
இது குறித்து அவர் அந்தப் பதிவில், " கடந்த வாரத்தில் நாங்கள் ஒரு குழுவாக உதவி தேவைப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முயற்சித்தோம். ஆயிரம் குடும்பங்களுக்கும் மேல் நாங்கள் உணவு பொட்டலங்களை வழங்கினோம். மேலும் ஒரு கோடி 25 லட்சம் ரூபாயும் நிதி திரட்டினோம்.
இந்தத் தொகை நிச்சயம் ஒரு லட்ச குடும்பங்களுக்கு உதவும்" என குறிப்பிட்டிருந்தார். இந்தியாவில் கரோனா வைரசால் இதுவரை 1071 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ்: ஒரு மில்லியன் யூரோக்களை நன்கொடையாக வழங்கிய ஜோகோவிச்!