இந்தாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் இன்று நடைபெற்ற மகளிர் காலிறுதிச்சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி, செக் குடியரசின் பெட்ரோ க்விட்டோவாவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை ஆஷ்லே 7-6 என்ற கணக்கில் க்விட்டோவாவிடம் போராடி வென்றார். இதனையடுத்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஷ்லே இரண்டாவது செட்டையும் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி க்விட்டோவாவை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி 36 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக 1984ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் வெண்டி டர்ன்புல் இத்தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிவரை சென்றதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக லால், நாயக் நியமனம்!