இந்தாண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச், ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான நோவாக் ஜோகோவிச் 6-4, 4-6, 2-6, 6-3, 6-4 என்ற செட்கணக்குகளில் தீமை வீழ்த்தி, இத்தொடரில் தனது எட்டாவது சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
-
The king has returned 👑
— #AusOpen (@AustralianOpen) February 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
After almost four hours, @DjokerNole def. Dominic Thiem 6-4 4-6 2-6 6-3 6-4 to claim his eighth Australian Open crown.#AO2020 | #AusOpen pic.twitter.com/EJOKBy040s
">The king has returned 👑
— #AusOpen (@AustralianOpen) February 2, 2020
After almost four hours, @DjokerNole def. Dominic Thiem 6-4 4-6 2-6 6-3 6-4 to claim his eighth Australian Open crown.#AO2020 | #AusOpen pic.twitter.com/EJOKBy040sThe king has returned 👑
— #AusOpen (@AustralianOpen) February 2, 2020
After almost four hours, @DjokerNole def. Dominic Thiem 6-4 4-6 2-6 6-3 6-4 to claim his eighth Australian Open crown.#AO2020 | #AusOpen pic.twitter.com/EJOKBy040s
ஜோகோவிச் இந்த வெற்றியின் மூலம் தனது 17ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார். இவர் இன்னும் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்லும் பட்சத்தில், அதிக கிரண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற பெருமையையும் பெறுவார். தற்போது வரை சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 19 கிரண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றதே சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பரிசு தொகை விபரம்:
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் வெற்றிபெறும் வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பை பரிசாக வழங்கபடுகிறது. அதுபோக அவர்களுக்கு 4.12 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாகவும் வழங்கப்படுகிறது. இதன் இந்திய மதிப்பானது சுமார் ரூ.29.42 கோடியாகும்.
அதேபோல் இறுதிச்சுற்றில் தோல்வியைத் தழுவும் வீரர், வீராங்கனைகளுக்கான பரிசுத்தொகையாக சுமார் 2.06 மில்லியன் அமெரிக்க டலார் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. இதன் இந்திய மதிப்பானது ரூ.14.73 கோடியாகும்.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் குறித்து மனம்திறக்கும் ஷரத் கமல்: சிறப்புப் பேட்டி!