ETV Bharat / sports

ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கும் நட்சத்திரங்கள் - Australian open tennis

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க உள்ளதை உலகின் தலைசிறந்த ஆடவர், மகளிர் நட்சத்திரங்கள் ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.

Roger federer, Serena williams
Roger federer, Serena williams
author img

By

Published : Dec 15, 2019, 11:55 AM IST

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான புகழ்பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதனிடையே அடுத்தாண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 115ஆவது ஆஸ்திரேலிய ஓபன் தொடரான இதில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களின் பெயரைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதனிடையே இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ளதை முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் உறுதி செய்துள்ளனர். அந்த வகையில் ஆடவர் பிரிவில் உலகின் முன்னணி நட்சத்திரங்களான ரோஜர் பெடரர் (சுவிஸ்), நடால் (ஸ்பெயின்), நோவாக் ஜோக்கோவிச் (செர்பியா) ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.

nadal
நடால்

ஆஸ்திரேலிய ஓபனில் நடப்பு சாம்பியனான ஜோக்கோவிச் எட்டாவது பட்டத்தை நோக்கியும், ஃபெடரர் ஏழாவது பட்டத்தை நோக்கியும் களமிறங்குகின்றனர். இதில் நடால் ஒரே ஒரு பட்டத்தை (2009) கைப்பற்றியுள்ள நடால், இம்முறை மீண்டும் பட்டம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர்கள் தவிர்த்து ஆடவர் பிரிவில் டோம்னிக் தீம் (ஆஸ்திரியா), டேனில் மெத்வதேவ் (ரஷ்யா), ஸ்டெப்பானோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), அலெக்சாண்டர் ஜுவ்ரெவ் (ஜெர்மனி), மேட்டியோ பெரெட்டனி (இத்தாலி), ராபர்டோ பாட்டிஸ்டா அகட் (ஸ்பெயின்) ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

இதேவேளையில் மகளிர் பிரிவில் முன்னாள் உலக நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், அவரது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ், ஜப்பானின் நவோமி ஓசாகா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்தத் தொடருடன் ஓய்வு பெறவுள்ள டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கியும் இதில் கலந்துகொள்கிறார்.

naomi osaka
நவோமி ஓசாகா, கரோலின் வோஸ்னியாக்கி

ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் மகளிர் பிரிவில் கடந்த பத்து ஆண்டுகளில் ஏழு வீராங்கனைகள் பட்டம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் தொடரில் செரீனா வில்லியம்ஸ் பட்டம் வென்றால், அதிக முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற மார்க்கரட் கோர்ட்டின் (24 பட்டங்கள்) என்ற சாதனையை சமன் செய்வார். ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் செரீனா இதுவரை ஏழு பட்டங்களை வென்றுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை தாஜ் ஹோட்டல் ஊழியரைச் சந்திக்க விரும்பும் லிட்டில் மாஸ்டர்!

Intro:Body:

https://www.aninews.in/news/sports/tennis/australian-open-djokovic-federer-nadal-confirms-participation20191214114546/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.