நடப்பு ஆண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ், இத்தாலியின் மார்கோ செச்சினாடோவுடன் (Marco Cecchinato) மோதினார்.
இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்சாண்டர் ஸ்வெரவ் 6-4, 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டிக்குப் பின் பேசிய அலெக்சாண்டர் ஸ்வெரவ், "இந்தத் தொடரில் நான் வெல்லும் ஒவ்வொரு போட்டிக்கும் தலா 10 ஆயிரம் டாலரை காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்குவேன்.
ஒருவேளை நான் இந்தத் தொடரின் சாம்பியன் பட்டம் வென்றால் பரிசு தொகையான 2.84 மில்லயன் டாலரையும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணமாக வழங்குவேன்" என உறுதியளித்தார். அலெக்சாண்டர் ஸ்வெரவ் இதனைத் தெரிவித்தவுடன் களத்திலிருந்த அனைவரும் அவருக்கு கரகோஷம் செய்து பேராதரவு தந்தனர்.
இதையும் படிங்க: மூன்றாவது முறையாக முதல் சுற்றிலேயே நடையைக் கட்டும் ஷரபோவா!