ETV Bharat / sports

'வெற்றி, தோல்விகளைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக, விளையாட்டை ரசிக்க வேண்டும்'- பி.வி.சிந்து

ஒவ்வொரு விளையாட்டிலும் பங்கேற்கும் வீரர்கள் வெற்றி, தோல்விகளைப் பற்றி சிந்திக்காமல், தங்களது விளையாட்டை ரசிக்க வேண்டுமென மகளிர் பேட்மிண்டன் உலகச்சாம்பியன் பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

you-have-to-enjoy-sports-instead-of-thinking-about-winning-and-losing-says-pv-sindhu

author img

By

Published : Jul 5, 2020, 3:10 AM IST

இந்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை இணைந்து, விளையாட்டு வீரர்களுக்கான ஃபிட் இந்தியா அமர்வினை ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்வின் முதல் அமர்வில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் ஆர்.பி. நிஷாங்க், விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய பி.வி.சிந்து, 'விளையாட்டு வீரர்கள் வெற்றி, தோல்விகளைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக, விளையாட்டை அனுபவிக்க வேண்டும். மேலும் ஒவ்வொருவரும் பள்ளிகளிலிருந்தே, தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டில் இறங்குவது மிகவும் முக்கியமானது. நீங்கள் பல மணி நேரம் பயிற்சி செய்ய முடியாவிட்டாலும் கூட, அரை மணி நேரம் அல்லது 45 நிமிட பயிற்சிகளை மேற்கொண்டால் கூட போதுமானது.

ஏனெனில் ஒவ்வொரு விளையாட்டுக்கும் உடற்தகுதி என்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் உடற்பயிற்சிகளுடன் சகிப்புத்தன்மை, சுறுசுறுப்பு மற்றும் எடை பயிற்சிகளிலும் ஆர்வம் காட்டுவதும் மிகவும் முக்கியமானது' என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.