மகளிர்களுக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில், 48 கிலோ எடைப் பிரிவில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, வெனிசுலாவைச் சேர்ந்த செடினோ ரோஜாஸ் டெயோனிஸுடன் (Cedeno Rojas Tayonis) மோதினார்.
இதில், சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி மஞ்சு ராணி 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் தென் கொரியா வீராங்கனை கிங் ஹயாங் மி உடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
இப்போட்டியில் இவர் வெற்றிபெறும் பட்சத்தில் வெண்கலப் பதக்கத்தை அவர் உறுதி செய்வார் என்பதால், அவரது ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.
-
Awesome Manju!👏👏👏
— Boxing Federation (@BFI_official) October 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Confident & strong tactical show by #ManjuRani ensures a one-sided victory for the debutant, she blanked opponent Cedeno Rojas Tayonis of 🇻🇪 with a unanimous verdict 5⃣:0⃣ to reach the Quarter Finals in 48kg.
Way to go girl!💪👍#PunchMeinHaiDum#boxing pic.twitter.com/NKmLHI3KFU
">Awesome Manju!👏👏👏
— Boxing Federation (@BFI_official) October 7, 2019

Way to go girl!💪👍#PunchMeinHaiDum#boxing pic.twitter.com/NKmLHI3KFUAwesome Manju!👏👏👏
— Boxing Federation (@BFI_official) October 7, 2019
Confident & strong tactical show by #ManjuRani ensures a one-sided victory for the debutant, she blanked opponent Cedeno Rojas Tayonis of 🇻🇪 with a unanimous verdict 5⃣:0⃣ to reach the Quarter Finals in 48kg.
Way to go girl!💪👍#PunchMeinHaiDum#boxing pic.twitter.com/NKmLHI3KFU
அதேபோல், நடைபெற்ற 64 கிலோ எடைப் பிரிவுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு பம்போரியா 1-4 என்ற புள்ளிகள் கணக்கில் இத்தாலியைச் சேர்ந்த ஏஞ்சலினா கரினியிடம் தோல்வி அடைந்தார்.
இதையும் படிங்க: #AIBAWorldBoxingChampionship: உலக அளவில் வெள்ளி வென்ற முதல் இந்தியர்!