ETV Bharat / sports

கோவிட்-19: உலகக்கோப்பை குதிரையேற்றத் தொடர் நிறுத்திவைப்பு!

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இம்மாதம் 28ஆம் தேதி தூபாயில் நடைபெறவிருந்த உலகக்கோப்பை குதிரையேற்றத் தொடர் நிறுத்திவைக்கப்படுவதாக மேதான் குழு அறிவித்துள்ளது.

World Cup 2020 called off due to COVID-19 pandemic

author img

By

Published : Mar 23, 2020, 9:16 AM IST

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இதுவரை உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் இப்பெருந்தொற்றுக் காரணமாக பல முக்கிய விளையாட்டுத்தொடர்களும் ஒத்திவைப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இம்மாதம் 28ஆம் தேதி துபாயில் தொடங்க இருந்த 25ஆவது குதிரையேற்ற உலகக்கோப்பைத் தொடரை அடுத்த ஆண்டு வரை நிறுத்திவைப்பதாக, தொடர் ஒருங்கிணைப்பாளர்களான மேதான் குழு அறிவித்துள்ளது.

மேதான் குழு தலைவர் சயீத் அல் டயர்
மேதான் குழு தலைவர் சயீத் அல் டயர்

இதுகுறித்து அக்குழுவின் தலைவர் சயீத் அல் டயர்(Saeed Al Tayer) கூறுகையில், கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலக நாடுகள் பாதிப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த உலகக்கோப்பைத் தொடரை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளோம். மேலும் சவுதி அரேபியா அரசின் உத்தரவின் படியும், நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் குழுவின் விருப்பத்தின் பேரிலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றுத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோவிட்-19: ஒத்திவைக்கப்படுகிறதா டோக்கியோ ஒலிம்பிக்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.