ETV Bharat / sports

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன் - இளவேனில் நம்பிக்கை - Elavenil Records

கடலூர்: 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன் என உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவான் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Elavenil Valarivan
author img

By

Published : Sep 15, 2019, 11:11 AM IST

ரியோ டி ஜெனிரோவில் கடந்த மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தார்.

கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பத்தைச் சேர்ந்த உருத்திராபதி (84), ஓய்வுபெற்ற கால்நடை ஆய்வாளர். இவரது மனைவி கிருஷ்ணவேணி (74), இவர்களது மகன் வாலறிவன்-சரோஜா தம்பதியினரின் மகள் தான் இளவேனில். தற்போது இவரது பெற்றோர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்துவருகின்றனர்.

இளவேனிலுக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு

இந்நிலையில், சொந்த ஊரில் தனது தாத்தாவை சந்தித்து ஆசிபெற காராமணிக்குப்பத்துக்கு வருகைதந்த இளவேனிலுக்கு உறவினர்கள், ஊர் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஊர் எல்லையிலிருந்து தனது தாத்தா வீடு செல்லும்வரை இளவேனிலுக்கு ஒவ்வொரு வீடுகளிலும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். ஊர் இளைஞர்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கம்வென்ற இளவேனிலுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

பின்னர், நமது ஈ டிவி பாரத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது,

"காராமணி குப்பத்தில் பிறந்து அகமதாபாத்தில் வளர்ந்த என்னால் தமிழ்மொழி எப்போதும் மறக்க முடியாது. விளையாட்டாக துப்பாக்கிச் சுடும் போட்டியை ஆரம்பித்து அதுவே மிகவும் பிடித்ததால் விளையாட்டுப் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றேன்.

அனைவரும் குடும்பமாக இருந்து வரவேற்பு அளித்ததை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உலகக்கோப்பை போட்டியில் தங்கம் வென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மகிழ்ச்சியோடு அடுத்து நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப், உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் தொடரின் இறுதிப் போட்டி, ஒலிம்பிக் ஆகியவற்றில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பேன்.

இளவேனில் பேட்டி

நான் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதற்கு எங்கள் குடும்பம்தான் ஊக்கமளித்தது. ஏனெனில் அவர்கள் என்னை எதற்கும் கட்டுப்படுத்தவில்லை. தொடர்ந்து ஊக்கம் அளித்து வந்ததால்தான் இந்தச் சாதனை புரிய முடிந்தது. தங்கப்பதக்கம் வென்றதும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

சொந்தங்களுடன் இளவேனில்

அப்போது, அவரது தந்தை வாலறிவன், தாத்தா உருத்திராபதி, பாட்டி கிருஷ்ணவேணி ஆகியோர் உடனிருந்தனர். டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் இளவேனில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என நம்புவோம் என அவரது ரசிகர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

Intro:துப்பாக்கி சுடுதல் தங்கம் வென்ற இளவேனிலுக்கு கடலூரில் உற்சாக வரவேற்பு
ஒலிம்பிக் தங்கம் வெல்வதாக நம்பிக்கைBody:கடலூர்
செப்டம்பர் 14,
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை இளவேனிலுக்கு கடலூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம் வென்றார். இவர், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சனிக்கிழமை மாலையில் கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பம் வந்திருந்த இளவேனிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காராமணிக்குப்பம் சேர்ந்தவர் உருத்திராபதி (84), ஓய்வுபெற்ற கால்நடை ஆய்வாளர். இவரது மனைவி கிருஷ்ணவேணி (74). இவர்களது மகன் வாலறிவன்-சரோஜா தம்பதியினரின் மகள் தான் இளவேனில். தற்போது இவர்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வருகின்றனர்.

சொந்த ஊரில் தாத்தாவை சந்தித்து ஆசி பெறுவதற்காக வந்திருந்த இளவேனிலை சொந்த ஊரான காராமணிக்குப்பம் எல்லையில் ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்றனர். சாலையில் இருந்து தாத்தா வீட்டிற்கு சென்ற இளவேனிலுக்கு, ஒவ்வொரு வீடுகளிலும் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் ஊர் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கம் வென்ற இளவேனிலிடம் செல்பி எடுத்து கொண்டனர்

பின்னர், அவர் ஈ டிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது;
அனைவரும் குடும்பமாக இருந்து வரவேற்பு அளித்ததை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. உலககோப்பை போட்டியில் தங்கம் வென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வருங்காலங்களில் அதிக அளவில் போட்டிகள் உள்ளது. கண்டிப்பாக வருகிற ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன். மேலும் தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன். அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
காராமணி குப்பத்தில் பிறந்து அகமதாபாத்தில் வளர்ந்தேன். தமிழ்மொழி எப்பொழுதும் என்னால் மறக்க முடியாது. விளையாட்டாக துப்பாக்கி சுடும் போட்டியை ஆரம்பித்து அதுவே மிகவும் பிடித்ததால் விளையாட்டு பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றேன்.
இனிவரும் காலங்களில் அதிக அளவில் பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன். நான் இவ்வள பெரிய வெற்றி பெற்றதற்கு எங்கள் குடும்பம் தான் ஊக்கமளித்தது. ஏனென்றால் அவர்கள் என்னை எதற்க்கும் கட்டுப்படுத்தவில்லை. தொடர்ந்து ஊக்கம் அளித்து வந்ததால் இந்த சாதனை புரிய முடிந்தது. தங்கப்பதக்கம் வென்றதும் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
அப்போது, அவரது தந்தை வாலறிவன், தாத்தா உருத்திராபதி, பாட்டி கிருஷ்ணவேணி ஆகியோர் உடனிருந்தனர்.

பேட்டி – இளவேனில்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.