ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தனி நபர் பிரிவில் கலந்துகொண்ட அமெரிக்க வீராங்கனை அனிதா அல்வாரெஸ் திடீரென மயக்கமடைந்து நீரில் மூழ்கினார்.
இதையடுத்து அவரது பயிற்சியாளர் ஆண்ட்ரியா ஃபுயெண்டஸ் உடனடியாக குளத்தில் தாவி அனிதா அல்வாரெஸை மீட்டு , உயிருடன் காப்பாற்றினார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது அனிதா அல்வாரெஸ் குணமடைந்து வருவதாகவும் , அவருக்கு பெரிய அளவு பாதிப்பில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அனிதா அல்வாரெஸின் பயிற்சியாளர் ஆண்ட்ரியா ஃபுயெண்டஸ் கூறுகையில், 'அவர் பெரும் ஆபத்தில் இருந்து தப்பித்ததாகவும், பாதுகாவலர்கள் அவரை காப்பாற்றுவார்கள் என நினைத்தேன். ஆனால், தாமதம் ஏற்படவே தான் குளத்தில் குதித்ததாகவும்’ கூறினார்.
இச்சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.