டோக்கியோ : ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொள்ளும் பிரேசில் வீரர்கள் 31 பேர் டோக்கியோவில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
இந்தக் ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் 8 பேருக்கு கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட ஊழியர்கள் யாரும் சக ஊழியர்களுடன் தொடர்பில் இல்லாதவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதே ஹோட்டலில் தென் ஆப்பிரிக்க வீரர்களும் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர். டோக்கியோவில் புதன்கிழமை (ஜூலை 14) 1,149 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் அங்கு சுகாதார அவசர நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 8ஆம் தேதி நிறைவுபெறுகின்றன.
இதையும் படிங்க : ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டத்தைவிட பாதுகாப்பு முக்கியம்’ - சீகோ ஹாஷிமோடோ