ETV Bharat / sports

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரஃபேல் நடால் அதிர்ச்சி தோல்வி - காலிறுதிக்கு முன்னேறினார் அமெரிக்க வீரர் டைஃபோ!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், அமெரிக்க வீரர் ஃப்ரான்சைஸ் டைஃபோ, நட்சத்திர வீரர் ரஃபேல் நடாலை வெற்றி கொண்டார். இதையடுத்து டைஃபோ காலிறுதிக்கு முன்னேறினார். நடால் தோல்வியடைந்தார்.

Tiafoe
Tiafoe
author img

By

Published : Sep 6, 2022, 5:02 PM IST

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், 22 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வென்ற சாதனை வீரரான ரஃபேல் நடாலும், அமெரிக்க வீரர் ஃப்ரான்சைஸ் டைஃபோவும் (Frances Tiafoe) மோதினர்.

இதில், நான்காவது சுற்றில் டைஃபோ, ரஃபேல் நடாலை 6-4, 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார். இதன் மூலம் டைஃபோ காலிறுதிக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் தொடரில் ரஃபேல் நடாலை வீழ்த்திய மூன்றாவது அமெரிக்க வீரர் டைஃபோ.

இதுகுறித்து பேசிய டைஃபோ, "இதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு நிமிடம் உலகமே நின்றுவிட்டதுபோல தோன்றியது. மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் விளையாடியவர்களில் நடால்தான் மிகச்சிறந்த வீரர். அவரை நான் வென்றுவிட்டேன் என்று என்னால் நம்ப முடியவில்லை. இந்த தருணத்தை விட சிறப்பாக எதுவும் இருந்துவிட முடியாது" என்று கூறினார்.

இதையும் படிங்க: கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த ரெய்னா... வருத்தத்தில் ரசிகர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.