ETV Bharat / sports

அடுத்த போட்டிகளில் தங்கம் - நீரஜ் சோப்ரா உறுதி - ஓரிகன்

அடுத்தடுத்து வரும் சர்வதேச போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்ல தீவிரமாக முயற்சிப்பேன் என உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். தட்பவெட்ப சூழல் சற்று சவாலாக இருந்ததாகவும், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

தங்கவேட்டை தொடரும்
தங்கவேட்டை தொடரும்
author img

By

Published : Jul 24, 2022, 2:00 PM IST

அமெரிக்கா: அமெரிக்காவின் ஓரிகன் மகாணத்தில் உள்ள யூஜின் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்று அசத்தினார். 2003இல் அஞ்சு பாபி ஜார்ஜ் வென்ற வெண்கலத்திற்கு பின் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு பதக்கத்தை பெற்றுக்கொடுத்து வரலாறு படைத்துள்ளார்.

இந்நிலையில், போட்டி குறித்தும், தங்கத்தை தவறவிட்டது குறித்தும் நீரஜ் பேசியதாவது,"போட்டி மிகவும் கடினமானதாக இருந்தது. சக போட்டியாளர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடியது மிகவும் சவாலானதாக இருந்தது. தங்கத்திற்கான வேட்டை தொடரும். ஆனால், நம்மால் எல்லா முறையும் தங்கம் வெல்ல முடியாது என்பதை நம்ப வேண்டும். பயற்சியில் முழு கவனத்தை செலுத்தி, என்னால் முடிந்ததை செய்வேன்.

  • ✅1st WAC medal in Javelin for India
    ✅1st 🥈 for India at WAC
    ✅1st male Indian athlete to win a WAC medal
    ✅2nd Indian to win a medal at WAC
    ✅Only Indian with an Olympic and a WAC medal

    Neeraj Chopra has just begun🔥🇮🇳

    (📸: SAI/Twitter)#Athletics | #WCHOregon22 pic.twitter.com/lPlAl71tgw

    — The Bridge (@the_bridge_in) July 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இங்கு தட்பவெட்ப சூழல் சற்று சவாலாக இருந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என நம்பினேன். வெள்ளி வென்றது மகிழ்ச்சிதான், உலக சாம்பியன்ஷிப் நாட்டிற்காக முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்று கொடுத்த பெருமையை நான் பெற்றுக்கொள்கிறேன்" என்றார்.

தொடர்ந்து, பேசிய அவர்,"ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதால் என் மீது அழுத்தம் இருப்பதாக நான் உணரவில்லை. முதல் மூன்று வாய்ப்புகளில் மோசமாக வீசிய பின்னும், எனக்கு நம்பிக்கை இருந்தது. அதில் இருந்து மீண்டு தற்போது வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளேன்.

நான்காவது த்ரோவிற்கு பிறகு எனது தொடை சற்று வலியெடுத்தது. அதனால் கடைசி இரண்டு த்ரோவை சரியாக வீச முடியவில்லை. தொடையில் ஏற்பட்ட காயம் நாளை காலைக்குள் சரியாகிவிடும். இதனால், காமன்வெல்த் போன்ற அடுத்தடுத்த தொடர்களில் பங்கேற்பதில் எந்த சிக்கலும் இல்லை. அடுத்தடுத்த தொடர்களில் எனது பதக்கத்தின் நிறத்தை (தங்கம்) மாற்ற முயற்சிப்பேன்" என்றார்.

நீரஜ் சோப்ரா இதுவரை, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் தொடர், 2018 காமன்வெல்த் தொடர், 2018 ஆசிய விளையாட்டு போட்டிகள், 2021 டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஆகிய சர்வதேச தொடர்களில் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • It was extremely a tense moment till this throw from @Neeraj_chopra1 !!#NeerajChopra is a true Champion who delivers the best shots when it desperately matters like all greatest Champions do in biggest platforms, Olympics & World Championships ! pic.twitter.com/3OUGJqy9Qy

    — Kiren Rijiju (@KirenRijiju) July 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: வெள்ளி வென்ற வேங்கை நீரஜ்ஜின் சிறப்பு புகைப்படத் தொகுப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.