ETV Bharat / sports

ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்று - துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் சாதனை! - ஆசிய ஒலிம்பிக் தகுதி

ஜாகர்தாவில் நடைபெறும் ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று துப்பாக்கி சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Elavenil Valarivan
Elavenil Valarivan
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 10:44 PM IST

ஜாகர்தா : அசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்று துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார். இந்தோனேஷியாவின் ஜாகர்த்தாவில் ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாலறிவன் மற்றும் நான்சி ஆகியோர் பங்கேற்றனர்.

அபாரமாக செயல்பட்ட நான்சி இறுதிப் போட்டியில் 252 புள்ளி 8 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அதே சுற்றில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் 252 புள்ளி 7 புள்ளிகள் பெற்று நூலிழையில் தங்கத்தை இழந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை மெஹூலி கோஷ் 210 புள்ளிகள் பெற்று 4வது இடத்தை பிடித்து நூலிழையில் பதக்கத்தை கோட்டை விட்டார்.

சீன வீராங்கனை ஷென் யுபன் மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். முன்னதாக ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ருத்ரான்க்‌ஷ் பாடீல் வெண்கலம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் பபுதா இறுதி சுற்றில் 6வது இடத்தை பிடித்து பதக்கத்தை தவறவிட்டார்.

இதையும் படிங்க : Ind vs Afg 1st t20 : விராட் கோலி விலகல்! இதுதான் காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.