சென்னை: ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்று இந்தியாவின் எட்டாவது பாரிஸ் ஒலிம்பிக் கோட்டாவில் இடம் பெற்று சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது ஆசிய பாரா விளையாட்டு போட்டி F64 நிகழ்வில், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அண்டில் 73.29 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை, ஆசிய சாதனை மற்றும் ஆசிய பாரா விளையாட்டு சாதனைகளை முறியடித்துள்ளார்.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சீன ஜோடியான ஜாங் யிஃபான் (தங்கம், 243.7) மற்றும் லியு ஜின்யாவோ (242.1) ஆகியோரை தொடர்ந்து, 221.1 புள்ளிகளுடன் இந்திய வீரர் சரப்ஜோத் இந்தியாவுக்கு எட்டாவது ஒலிம்பிக் ஒதுக்கீட்டையும், பிஸ்டல் போட்டிகளில் முதலிடத்தையும் பெற்று தந்தார்.
இந்நிலையில் நான்காவது ஆசிய பாரா விளையாட்டு போட்டியின் F64 நிகழ்வில் மூன்றாவது நாள் நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சுமித் ஆன்டில் மற்றும் புஷ்பேந்திர சிங் தங்கம் மற்றும் வெண்கலம் வென்று பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்த போட்டியில் சுமித் தனது மூன்றாவது முயற்சியில் 73.29 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து ஆசிய பாராவிளையாட்டு சாதனை, உலக சாதனை மற்றும் ஆசிய சாதனை பெற்றுள்ளார். இலங்கையின் ஆராச்சிகே சமிதா 62.42 மீட்டர் எறிந்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். மேலும் புஷ்பேந்திர சிங் 62.06 மீட்டர் எறிந்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
-
PARALYMPIC AND WORLD CHAMPION SUMIT ANTIL IS NOW A ASIAN PARA GAMES CHAMPION
— SPORTS ARENA🇮🇳 (@SportsArena1234) October 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
WR holder Sumit ANTIL created NEW WORLD RECORD with a throw of 73.29 mts in F64 Javelin Throw finals to win 🥇
Pushpendra wins 🥉 with a best throw of 62.06 mts at same eventpic.twitter.com/0Ak1gWzaxJ
">PARALYMPIC AND WORLD CHAMPION SUMIT ANTIL IS NOW A ASIAN PARA GAMES CHAMPION
— SPORTS ARENA🇮🇳 (@SportsArena1234) October 25, 2023
WR holder Sumit ANTIL created NEW WORLD RECORD with a throw of 73.29 mts in F64 Javelin Throw finals to win 🥇
Pushpendra wins 🥉 with a best throw of 62.06 mts at same eventpic.twitter.com/0Ak1gWzaxJPARALYMPIC AND WORLD CHAMPION SUMIT ANTIL IS NOW A ASIAN PARA GAMES CHAMPION
— SPORTS ARENA🇮🇳 (@SportsArena1234) October 25, 2023
WR holder Sumit ANTIL created NEW WORLD RECORD with a throw of 73.29 mts in F64 Javelin Throw finals to win 🥇
Pushpendra wins 🥉 with a best throw of 62.06 mts at same eventpic.twitter.com/0Ak1gWzaxJ
இந்த வெற்றியுடன், 10 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களை வென்று இந்தியா தரவரிசை பட்டியலில் 5 ஆவது இடத்தில் உள்ளது. இந்திய அணி 6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் முதல் நாள் வெற்றியைப் பிரதிபலிக்க ஆர்வமாக உள்ளது.
இம்முறை ஆசிய பாரா விளையாட்டு போட்டிக்கு இந்தியா 191 ஆண்கள் மற்றும் 112 பெண்களை அனுப்பியுள்ளது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியாவில் இருந்து மொத்தம் 190 விளையாட்டு வீரர்கள் பங்கேற்று 15 தங்கம் உட்ப்பட 72 பதக்கங்களுடன் சிரந்த ஆட்டத்தை வெழிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இமாச்சல பிரதேச முதலமைச்சருடன் விராட் கோலி திடீர் சந்திப்பு! என்ன காரணம்?