சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 ஆடவர் சாம்பியன் போட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று முதல் ஜோடி போட்டிகள் தொடங்கின. இதில் இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி ஜோடிகளான ஸ்ரீராம் பாலாஜி மற்றும் ஜீவன் நெடுஞ்செழியன் ஆகியோர் ஃபிரடெரிக் ஃபெரீரா சில்வா, நிக்கோலஸ் மோரின் டி அல்குர்ஆன் ஆகியோரை 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.
மேலும், இந்தியர்கள் வைல்டு கார்டுகளான சுமித் நாகல், சசிகுமார் முகுந்த் ஆகியோருக்கு எதிராக போட்டியில் 7-6, 2-1 என்ற செட் கணக்கில் யுசியு ஹ்சு, கிறிஸ்டோபர் ருங்காட்டை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
மற்றொரு இந்தியரான அர்ஜுன் காதேவும் காலிறுதிக்கு முன்னேறினார். அவர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஜே கிளார் உடன் இணைந்து 3-6, 6-3, 10-7 என டேன் கெல்லி, டேன் ஸ்வீனியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதையும் படிங்க:Women's T20 World Cup: இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்