கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, பாண்டிச்சேரி, திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 489 பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
இதில் கலந்து கொண்டுள்ள மாணவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இப்போட்டிகளானது ஐந்து நாட்கள் நடைபெறும் என்றும், வரும் 20ஆம் தேதி இறுதி போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.