ETV Bharat / sports

விளையாட்டுப் போட்டிகளில் கலக்கிய முன்னாள் ராணுவத்தினர்! - கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு

திருவண்ணாமலை: முன்னாள் ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் 250க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

state Level Sports Meet for Ex-Servicemen In Tiruvannamalai

author img

By

Published : Mar 3, 2020, 7:20 PM IST

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு முன்னாள் படை வீரர் கழகத்தின் எட்டாம் ஆண்டுகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அதனை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கிவைத்தார்.

செஸ், கேரம், பேட்மிட்டன், வாலிபால், 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் உள்ளிட்ட ஓட்டப்பந்தயங்கள் என பத்து வகையான விளையாட்டுப் போட்டிகள் முன்னாள் ராணுவ வீரர்களுக்காக நடத்தப்பட்டது. 50 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

விளையாட்டுப் போட்டிகளில் கலக்கிய முன்னாள் ராணுவத்தினர்

இந்த விளையாட்டு போட்டிகளில் திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட 12 மண்டலங்களில் இருந்து 250 முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையில் மார்ச் 12ஆம் தேதி நடக்கவுள்ள ஆண்டு விழாவின்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பரிசுகள் வழங்கவுள்ளார்.

இதையும் படிங்க: கொல்கத்தா கால்பந்து மைதானத்தில் சிஏஏவுக்கு எதிராக வலுப்பெற்ற போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.