பின்பு செய்தியாளர்களிடம் கோமதி பேசுகையில், ”திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததும், ஊக்க தொகை அளித்ததும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னர் எனக்கு குறைந்த அளவு அரசு ஆதரவு வழங்கியது. என்னை யாருக்கும் தெரியாது. அது கொஞ்சம் வருத்தம் அளித்தது. ஆனால் தற்போது அனைவரும் ஆதரவு அளிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒலிம்பிக்கில் தேர்வாக வேண்டும் என்றால் வெளிநாட்டிற்கு சென்று பயிற்சி எடுக்க வேண்டும். அதற்கு உதவி செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும். தற்போது அதிகளவு உதவிகள் கிடைக்கிறது. இது தொடரும் என நம்புகிறேன். என்னை போல் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில், உள்ளவர்களுக்கும் அரசு உதவி செய்து ஊக்கப்படுத்த வேண்டும்.
கிராமங்களில் நிறைய காலி இடங்கள் உள்ளன. அதை பயன்படுத்தி விளையாட்டு மைதானங்கள் உருவாக்கி கிராமப்புற மாணவர்கள் சாதனை புரிய உதவினால் மகிழ்ச்சி ஏற்படும். ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு பயிற்சியாளராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
எனக்கு வேலை இல்லாதபொழுது எனக்கு கர்நாடக அரசுதான் உதவி செய்தது. அந்த உதவியை மறக்க மாட்டேன். தற்போது எனக்கு நம் ஊரில் வேலை கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் எனத் தெரிவித்தார்.