ETV Bharat / sports

‘எனக்கு ஷூ வேண்டாம்’ - இந்தியாவின் 'உசைன் போல்ட்' ரமேஷ்வர் பேச்சு! - இந்தியாவின் உசைன் போல்ட்

பயிற்சியில் சொதப்பிய பின் தனக்கு வெறும் கால்களுடன் ஓடுவதுதான் பிடித்திருக்கிறது என இந்தியாவின் ‘உசைன் போல்ட்’ என அழைக்கப்படும் ரமேஷ்வர் குர்ஜார் தெரிவித்துள்ளார்.

rameshwar
author img

By

Published : Aug 21, 2019, 4:07 AM IST

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்வர் குர்ஜார். தடகள வீரரான இவர், சமீபத்தில் வெறும் கால்களுடன் 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் இலக்கை 11 நொடிகளில் கடந்து அசத்தினார். இதையடுத்து, புயல் வேகத்தில் இவர் ஓடிய வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில், இவருக்கு உதவி செய்யுமாறு அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் கேட்டுக்கொண்டார்.

இதற்கு, கிரண் ரிஜிஜூ, ‘அவரை யாராவது என்னிடம் அழைத்துவாருங்கள், அவரைத் தடகள அகாடெமியில் சேர்த்து வைக்கிறேன்’ என பதிலிளித்தார். இதைத்தொடர்ந்து, போபாலில் இருக்கும் அகாடெமியில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில், ஷூ அணிந்துகொண்டு பங்கேற்ற ரமேஷ்வர் இலக்கை 12.9 விநாடிகளில் கடந்து சொதப்பினார்.

  • Rameshwar Gurjar's trial run was conducted at T T Nagar Stadium by senior coaches of SAI and State Govt. Here, Rameshwar is seen running at extreme left. He is exhausted due to the glare of publicity so couldn't perform well. Will give proper time and training to him. pic.twitter.com/RQtkxWFDFR

    — Kiren Rijiju (@KirenRijiju) August 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையடுத்து, மத்தியப் பிரதேச விளையாட்டுத்துறை அமைச்சர் ஜித்து பத்வாரி கூறுகையில், 'சமூகவலைதளங்கள் மூலமாகத்தான் ரமேஷ்வர் குறித்து தெரிந்துகொண்டேன். சோதனை ஓட்டத்தில் அவர் இலக்கை 11 விநாடிகளில் கடப்பதை தவறவிட்டார். அவருக்கு இன்னும் பயிற்சி தேவை என்பதால் ஒரு மாத காலம் இந்த அகாடெமியில் தீவிர பயிற்சியில் ஈடுபடுவார். அவர் டையட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.

பின்னர் சோதனை ஓட்டத்தில் தோல்வியுற்ற ரமேஷ்வர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், 'இன்னும் ஒரு சோதனை ஓட்டத்தில் பங்கேற்கவுள்ளனேன். ஷூ அணிந்தபோது எனது முதுகில் வலி ஏற்பட்டது மட்டுமின்றி அது என் ஆட்டத்திறன் மீது தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால், வெறும் கால்களுடன் ஓடுவதுதான் எனக்கு பிடித்துள்ளது. நம் நாட்டிற்காக தடகளப் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்.

இதற்காக நான், நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து என்னை தயார் செய்துவருகிறேன். முறையான பயிற்சி வசதிகளை அரசாங்கம் எனக்கு தந்துள்ளது. இருப்பினும், அரசாங்கம் எனக்கு உரிய ஆதரவு தந்தால், நிச்சயம் 100 மீட்டர் பிரிவில் உசைன் போல்ட்டின் சாதனையை முறியடிப்பேன்' என தெரிவித்தார்.

முன்னதாக, இவருக்கு இன்னும் பயிற்சி அளித்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார். மேலும் இவர் 100 மீட்டர் மட்டுமின்றி பல்வேறு பிரிவு ஓட்டப்பந்தயத்திலும் அசத்துவார் என அகாடெமியில் ரமேஷ்வருக்கு பயிற்சித் தரும் பயிற்சியாளர் ஷிப்ரா கூறினார். 100 மீட்டர் பிரிவில் ஜமைக்கா ஜாம்பவான் உசைன் போல்ட் 9.52 விநாடிகளில் இலக்கை கடந்ததே உலக சாதனையாக உள்ளது. இச்சாதனையை இவர் எதிர்காலத்தில் முறியடிப்பாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.