இந்திய தடகள வீராங்கனையான டூட்டி சந்த், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர், வரும் 27ஆம் தேதி தோஹாவில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ளார். இவர், தேசிய அளவிலான 100 மீட்டர் பிரிவில் 11.24 நொடிகளில் இலக்கை கடந்து சாதனைப் படைத்திருந்தார்.
இந்தியாவில் பல்வேறு விளையாட்டு சார்ந்த வீரர்கள், ஓய்வு பெற்றப் பின் அரசியலில் களமிறங்குவது தற்போது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தன் அரசியல் ஈடுபாடு குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "அரசியலில் சேர வேண்டும் என்ற விருப்பம் எனக்கு சிறுவயதிலிருந்தே இருந்துள்ளது. எனது குடும்பமும் அடிமட்ட அரசியலில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, எனது தாயார் எங்கள் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்" என பதிவிட்டிருந்தார்.
-
I have always wanted to join politics since childhood. My family has also been involved in grassroots politics, with my mother being the SARPANCH of our village.
— Dutee Chand (@DuteeChand) September 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I have always wanted to join politics since childhood. My family has also been involved in grassroots politics, with my mother being the SARPANCH of our village.
— Dutee Chand (@DuteeChand) September 23, 2019I have always wanted to join politics since childhood. My family has also been involved in grassroots politics, with my mother being the SARPANCH of our village.
— Dutee Chand (@DuteeChand) September 23, 2019
மேலும், தான் தடகள போட்டியிலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு அரசியலில் சேர்வேன். தற்போது தோஹாவில் நடைபெறும் தொடரில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவது ஒன்றே தனது லட்சியம் என்றும் தெரிவித்துள்ளார். 23 வயதான இவர், தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்றும், தனது நீண்டநாள் தோழியை விரைவில் மணமுடிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுதம் கம்பிர், விக்ரம் ரத்தோர் உள்ளிட்ட பல நட்சத்திரங்ளின் வரிசையில் பின் நாட்களில் டூட்டி சந்தும் இணைவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.